ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு பிரதமர் வாழ்த்து

மோனா அகர்வாலின் துல்லியம், உறுதி, நிதானம் ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை என்று மோடி தெரிவித்தார்.
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி
Published on: 

புது டெல்லி,

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்தகள் தெரிவித்தார்.

தங்க பதக்கம்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அபாரமான புள்ளிகளை குவித்து, ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் புதிய சாதனையையும் அவர் நிலைநாட்டியுள்ளார். இவரது இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை மிகவும் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மோனா அகர்வாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வாழ்த்துகள்

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள்! சிறப்பான புள்ளிகள் மூலம், அவர் ஒரு புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளார்!

பாராட்டு

இப்போட்டியில் இந்தியாவின் தொடக்கத்தை மேலும் சிறப்பாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது துல்லியம், உறுதி, நிதானம் ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. அடுத்து வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com