விரைவில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் பயணம்

விரைவில் பிரதமர் மோடி ஐக்கிய அரசு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
விரைவில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் பயணம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி பிப்ரவரி 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாட்டின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹியான் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிப்ரவரி 10-ம் தேதி மாலை அந்நாட்டிற்கு செல்கிறார், பின்னர் ஓமன் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com