

இந்தியா-ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி 3 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். இது ஜப்பான் பிரதமரின் இந்தியாவுக்கான முதல் அதிகாரப்பூர்வ பயணம் ஆகும். இந்நிலையில் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு இன்று வந்தார். அங்கு அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க முப்படைகளை சேர்ந்த ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சி யுடன் உச்சி மாநாட்டு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பின்னர் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப்பிரகடனம் மற்றும் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) துறையில் ஒத்துழைப்பு குறித்த கூட்டு தொலைநோக்கு திட்டம் ஆகியவற்றை இரு தலைவர்களும் வெளி யிட்டனர். இந்தியா மற்றும் ஜப்பான் உயிரி எரிவாயு திட்டத்தை உறுதிப்ப டுத்தின. பொருளாதார பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய தொழில்நுட் பங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் பரிமாறப்பட்டன.
பின்னர் டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தியா- ஜப்பான் வர்த்தக மன்ற கூட்டத்தில் டகாயிச்சி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்கள் இந்திய சந்தையில் வினியோக சங்கிலிகள், குறைகடத்திகள், முக்கிய கனிமங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி துறையில் ₹1.19 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளன.' இதனிடையே அரியானாவில் தொடங்கப்படும் மாருதி சுசூகியின் புதிய உற்பத்தி ஆலையை ஜப்பான் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இந்தியாவில் அமைய உள்ள மாருதி சுசூகியின் 4-வது உற்பத்தி ஆலை. இந்த ஆலைகளின் மொத்த மதிப்பு ₹35 ஆயிரம் கோடி ஆகும்.
முன்னதாக, வரவேற்புரையில் பேசிய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் டகாயிச்சியை "தனது தங்கை" என கூறி அன்புடன் வரவேற்றார். பின்னர், ஜப்பானிய தூதுக்-குழுவினர், பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக டகாயிச்சி மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணத்தை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி, இதுகுறித்த காணொலி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.