பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை - சித்தராமையா பேட்டி

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை என்று சித்தராமையா கூறினார்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை - சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.

காங்கிரஸ் வெற்றி குறித்து முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் கர்நாடகத்தில் நடத்திய 'ரோடு ஷோ'வால் எந்த பலனும் இல்லை. பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்த ஊழல் வழக்குகள், மதக் கலவரம், வன்முறை போன்றவைகளால் மாநில மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதனால்தான் இந்த தடவை பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

கர்நாடக மக்களுக்கு நல்லா தெரியும் இங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா யாரு வந்து வாக்கு கேட்டாலும் வெற்றி பெற முடியாது. 130-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். வருணா தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு மக்களுக்கும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com