நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி- ராகுல் காந்தி கலந்துரையாடல்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துரையாடினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி- ராகுல் காந்தி கலந்துரையாடல்
Published on

டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அரசியல்ரீதியாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இரு தலைவர்களும் சகஜமாக பேசிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com