துணை ஜனாதிபதி வீட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி

தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வீட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி அவருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவரது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு முருகப்பெருமான் புகைப்படத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பரிசாக கொடுத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com