பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. சிறப்புக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். 19-ம் தேதி (நாளை) முதல் 20-ம் தேதி வரை சிறப்புக்கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் சில முக்கிய மசோதாக்கள் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com