சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா - மலேசியா அணிகள் சமனில் இருந்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி முன்னிலை பெற்றிருந்தது.

2 கோல்கள் பின் தங்கியிருந்தநிலையில் மூன்றாவது சுற்றின் இறுதி நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 3-3 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது. அடுத்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பை தவற விட போட்டியில் பரபரப்பு உச்சத்தை தொட்டது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் ஒரு கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள்..! இது இந்தியாவின் 4வது வெற்றியாகும், இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமையை பற்றவைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com