இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வான லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வான லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வான லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சு இடையே போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரசுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை உள்ளது. உங்கள் புதிய பொறுப்புகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com