தமிழகம் உள்பட 4 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்பட 4 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் உள்பட 4 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து அவ்வபோது மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் ஆகியோரை நேற்று தனித்தனியாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி பணிகளின் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் எடுத்துரைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com