விருந்து நிகழ்ச்சியில் மாரியப்பன் தங்கவேலுவுடன் உரையாடிய பிரதமர் மோடி

விருந்து நிகழ்ச்சியில் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விருந்து நிகழ்ச்சியில் மாரியப்பன் தங்கவேலுவுடன் உரையாடிய பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். இது தொடர்பான காட்சிகளை பிரதமர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்ப தங்கவேலுவுடன் உரையாடிய பிரதமர் மோடி, பதக்கம் வென்றதும் அவரது தாயார் எப்படி உணர்ந்தார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாரியப்பன், தனது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வாய் என ஆறுதல்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com