

'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 'நீட்' தேர்வுக்காக பலர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனி யார் பயிற்சி நிறுவனங்களை நாடி வருகிறார்கள். இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங் களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகி றார்கள். தமிழக சட்டசபையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 2 முறை தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது.
இதற்கிடையே கடந்த 3-ந்தேதி 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப் பட்டது. ஆனால் தேர்வுக்கு முன்னதாகவே உத்தேச கேள்வித் தாள் என்ற பெயரில் வெளியான வினாத்தாள் பெரும் அதிர்வ லைகளை ஏற்படுத்தின.இதனால் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை அதிரடியாக ரத்து செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கை விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இதற்கிடையே நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாட் டின் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தி, கல்வித்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால் மோடி இது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. தர்மேந்திர பிரதானை உடனடியாக நீக்க வேண்டும். அல்லது அவர் பொறுப்பேற்க வேண்டும். தர்மேந்திர பிரதானை உடனடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.