நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிப்பது இல்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிப்பது இல்லை: சித்தராமையா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவா தத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் அமைதியாக இருந்தது கோழைத்தனமான செயல். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் பதிலுரை இல்லாமல் அந்த தீர்மானம் நிறைவேற் றப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் பிரதமர் மோடி நம்பகத்தன்மையை புறக்கணிக்கிறார் என்று அர்த்தம். இதில் விசேஷம் என்னவெனில் மத்திய அரசு முதலில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் செய்தது. அதன் பிறகு அரசே பேசாமல் அமைதியாகிவிட்டது. தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை பேசியபோது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்கவில்லை.

முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் இடம் பெற் றுள்ள அம்சங்களை பேச அனுமதிக்கவில்லை. அதில் கூறிய அம்சங் களை பேச பிரதமர் மோடி விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களின் குரலை ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பது இல்லை.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வர மாட்டார் என்று ராகுல்காந்தி கூறினார். அவரது வார்த்தைகள் உண்மையாகிவிட்டது. தனது முடிவு களில் நம்பிக்கை கொண்ட ஒரு தலைவர் விவாதத்தில் பங்கேற்காமல் ஓடி ஒளிய மாட்டார். சபாநாயகர் ஓம்பிர்லா பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார்.

அவர் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைத்துவிட்டார். மக்கள் பிரதிநிதிகளை காக்கும் பொறுப்பை அவர் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளை அடக்கி, பிரதமர் மோடி பதிலளிக்காமல் ஓடுவதன் மூலம் நாடாளுமன்றத் துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்துவது, அரசியல் சாசன அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, நாட்டின் ஜனநாயக அமைப்புகளை விழுங்கு வது என்பது பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் ஒரு அங்கம் ஆகும். பயம், அமைதி, தப்பித்தல் ஆகியவற்றால் ஜனநாயகத்தை காக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com