பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் காட்டு தீ குறித்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு , பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய சவால்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com