பிரதமர் மோடிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு  தொலைநோக்குப் பார்வை இல்லை: கார்கே குற்றச்சாட்டு
Published on

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருகு ரூ.3 உயர்த்தியது. நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை இந்த விலை உயர்வு ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: எரிபொருள் விலை உயர்வை பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால் அது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படி செய்தால் தனக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை மோடி அறிந்திருந்தார். எனவேதான், தேர்தல் முடிந்த பிறகு அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டன. பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை இது காட்டுகிறது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com