சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
Published on

புதுடெல்லி,

கேரளாவில் பிறந்த சமூக சீர்திருத்தவாதியும், துறவியுமான நாராயண குருவின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஓராண்டு கால விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, நாராயண குருவுக்கு புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது:-

நாராயண குரு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்து போராடினார். ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்று உபதேசித்தார். அவரது உபதேசம், நமது தேசபக்திக்கு ஆன்மிக பரிமாணம் அளிக்கிறது.

இந்தியர்களான நமது ஒரே சாதி-இந்தியத்தன்மை தான். ஒரே மதம்-சேவை தர்மம். ஒரே கடவுள்-இந்திய தாய்.

கல்வி, அறிவியல் போன்ற நவீனத்துவம் பற்றியும் நாராயண குரு பேசினார். அதே சமயத்தில், பல்லாயிரம் ஆண்டுகால இந்தியாவின் பாரம்பரியம், தர்மம், நம்பிக்கை ஆகியவற்றின் பெருமைகளை பேசுவதற்கு அவர் வெட்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com