

மைசூரு:
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று கர்நாடகம் வந்தார். பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் தனி விமானம் மூலம் வந்திறங்கினார். பின்னர் பெங்களூருவில், பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் மாலையில் பிரதமர் மோடி மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரல்களின்படி, நேற்று இரவு 8.35 மணியளவில் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற கணபதி பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்பட பலர் இருந்தனர்.