சீர்திருத்த நடவடிக்கைகள்; மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து செயலாளர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
சீர்திருத்த நடவடிக்கைகள்; மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
Published on

புதுடெல்லி,

அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இதில் சீர்திருத்த நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து செயலாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

சில செயலாளர்கள், தங்கள் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள். நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்த மோடி அரசு விரும்புகிறது. அதுபற்றி பிரதமர் ஆய்வு செய்கிறார்.

நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதுடன், அரசுப்பணியில் நிலுவை இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுரை கூறுவார் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com