

புதுடெல்லி,
உலக நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் அடிப்படையில் பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் நெதர் லாந்து, நார்வே மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் பஹல்காம் தாக்குதல் பின்னர் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை காரணமாக அவரது வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டது.
எனவே அந்த நாடுகளில் வருகிற 15 முதல் 20-ந்தேதி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் இத்தாலி உள்பட கூடுதலாக சில நாடுகளுக்கும் இந்தமுறை அவர் செல்ல இருப்பதாக தெரிகிறது. பிரதமரின் நார்வே பயணத்தின்போது இந்தியா-நார்டிக் 3-வது உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் டென் மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் சுவீடன் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்களு டன் பிரதமர் மோடி பல விஷயங்களை பேசுவார் எனத்தெரிகிறது. இத்தாலி நாட்டுக்கு பிரதமர் மேற்கொள்ள இருக்கும் இந்தப்பயணம், இந்தியாவுக்கான அவரது முதல் தனிப்பட்ட பயணம் ஆகும். இத்தாலியில் வாடிகனுக்கு சென்று போப் ஆண்டவரை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமரின் பயணத்திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் கூடுதலாக சேர்க்கப்படும் எனத்தெரிகிறது. அமீரகத்துக்கான இந்தப்பயணம், சுற்றுப்பயணத்தின் தொடக் கம் அல்லது இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.