கோரக்பூர்,.பிரதமர் மோடி வருகிற 7ந்தேதி உத்தர பிரதேசத்திற்கு வருகை தருகிறார். அதன்பின் கோரக்பூர் நகரில் அவர் ரூ.9,600 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.