நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி


நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி
x

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

விமானம் விபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "அகமதாபாத் துயர சம்பவம் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது. மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கும் களத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் தொடர்பிலிருந்து உதவிகள் அனைத்தையும் வழங்கி வருகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில், விமான விபத்தை நேரில் ஆய்வு செய்ய நாளை இன்று (13-ம் தேதி) அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி. அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் பிரதமர் மோடி.

1 More update

Next Story