நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

கோப்புப்படம்
ரமலான் நோம்பு இன்று தொடங்கிய நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் நோன்பு மற்றும் ரமலான் பண்டிகை என்பது பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இதனால் ரமலான் பண்டிகை உலகின் ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடுகிறது.
இந்த சூழலில் நாடு முழுவதும் இன்று முதல் ரமலான் மாதம் தொடங்கியது. இதனையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கி உள்ளநிலையில், அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. ரமலான் முபாரக்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






