வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாடுகள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். #PMmodi
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற 25-வது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் பின்னர், ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் நலன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, தனது மூன்று நாடுகள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று காலை டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடியை, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com