12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துப்பூர்வ கருத்துகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com