14-வது ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
14-வது ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

14-வது ஜி-20 உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20 நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நமது நாட்டின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். ஜி-20 உச்சி மாநாடு 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com