உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை மீட்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

பாதுகாப்பு சூழல் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி ரஷிய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசிய போது, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழதார்.

மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மாணவரின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். அப்போது, மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி மாணவரின் பெற்றொர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com