வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை, உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் - பிரதமர் மோடி

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்தது மகிழ்ச்சி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை, உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரிக்ஸ் நாடுகளான பிரேசில்,ரஷியா, இந்தியா,சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார்.

அதன்படி டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, வளர்ந்து வரும் பொருளாதார சூழலுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளமாக உருவெடுத்து உள்ளது என்றார்.

சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளவதாவது:-

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்தது மகிழ்ச்சி.

இவ்வுலகில் பயங்கரவாதம், இணைய பாதுகாப்புகள் மாற்றங்களுடன் காணப்படுகின்றன. தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளுதல், பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்களில் பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.

வளரும் நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஆதரவளித்தல், பாதுகாப்பான உலகை உருவாக்குதல் போன்றவற்றில் பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம். அதற்கான முயறசிகள் மேற்கொள்ளப்படும் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com