மகாத்மா காந்தியின் உன்னத சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் உன்னத சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் அரசு சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; - மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்கிறேன். காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும்.

தியாகிகள் தினமான இன்று நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் சேவையும், துணிச்சலும் என்றென்றும் நினைவு கூறப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டு (1948) மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com