ஜப்பான் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விருப்பம், பிரதமர் நரேந்திர மோடி

ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இணைந்து கூட்டுறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஜப்பான் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விருப்பம், பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி,

ஜப்பான் நாடாளுமன்றம் கடந்த திங்களன்று கிஷிடாவை பிரதமராக தேர்ந்தெடுத்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புமியோ கிஷிடாவிற்கு இன்று வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் தொலைபேசியில் பேசினார்.

அவரிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, ஜப்பான் இடையேயான உலகளாவிய கூட்டுறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கூறி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com