

புதுடெல்லி
அரியானா மாநிலம் ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி கடந்த 12ம் தேதி கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
மாணவி தீனதயாள் என்பவருக்கு சொந்தமான அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இன்னும் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை, இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறுகையில் இந்தியாவின் மற்றொரு மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கூட்டு பலாத்காரம் நடந்ததற்கு இந்தியா வெட்கி தலை குனிய வேண்டும். அரியானா பெண் பலாத்கார சம்பவத்தில் பிரதமர் மவுனம் சாதிப்பது ஏற்க முடியாது.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கமாக இருக்கிறது. பலாத்காரம் செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.