வெளிநாடு செல்வோருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியில் முன்னுரிமை - மத்திய அரசு உத்தரவு

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளிநாடு செல்வோருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்வோருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியில் முன்னுரிமை - மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் இடையே 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி விடப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். இருப்பினும், வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள், வேலையில் சேர செல்பவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்பவர்கள் ஆகியோர் முதல் டோஸ் போட்ட 28-ல் இருந்து 84 நாட்களுக்குள் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், இவ்வசதியை மேலும் பலருக்கு மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு செல்பவர்கள், தாயகம் திரும்ப வேண்டிய வெளிநாட்டினர் உள்பட தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளிநாடு செல்ல வேண்டிய அனைவருக்கும் முதல் டோஸ் போட்ட 84 நாட்கள் முடிவதற்கு முன்பே, அரசு தடுப்பூசி மையங்களில் 2-வது டோஸ் போடவேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com