பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு


பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு
x

பலாத்கார வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பலாத்கார வழக்குகள் உள்ளன. அதில், மைசூது மாவட்டம் கே.ஆர்.நகரை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, ஒலேநரசிப்புராவில் உள்ள தனது பண்ணை வீட்டிலும், பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்தும் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்தே பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்தார்.

இந்த வழக்கில் நேற்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறி இருந்தது. நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதிருந்தார். பின்னர் கோர்ட்டில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதுவரை விசாரணை கைதியாக இருந்த அவர், நேற்றில் இருந்து ஆயுள் தண்டனை கைதியாக மாறியுள்ளார். இதையடுத்து, அவருக்கு வெள்ளை நிற ஆடைகளை சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 15528 என்ற கைதி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story