

புதுடெல்லி,
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தலைநகர் டெல்லியே தத்தளிக்கிறது. மத்திய அரசு தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பெற்றுத்தரவேண்டும் ஆம் ஆத்மி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது போன்றவை டெல்லி மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.
இந்நிலையில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சந்தையில் ஆக்சிஜனை விற்பதாக எழுந்த புகாரில் உரிய விளக்கத்தை ஆலை நிர்வாகம் வழங்காத நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.