

புதுடெல்லி,
'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் வெளியானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தனது புருவ அசைவு மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.