உணர்வை பாதிக்கும் நடிகை கண்ணடிப்பு பாடலுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு

நடிகை கண்ணடிப்பு இஸ்லாத்துக்கு எதிரானது ‘ஒரு அடார் லவ்’ படத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #PriyaPrakashVarrier's
உணர்வை பாதிக்கும் நடிகை கண்ணடிப்பு பாடலுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு
Published on

புதுடெல்லி,

ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அடுத்து ட்ரெண்டாகி வந்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. இவருக்கு தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

அதே நேரம் படத்தில் வரும், மாணிக்கிய மலராய பூவி என்ற பாடல் இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து இந்த பாடலை எதிர்த்து கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடிகை பிரியாவுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர் இந்த படப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு படத்தின் இயக் குனர் ஓமர்லூலு கூறியதாவது:-

வடகேரளாவில் மல்பாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை 1978-ல் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டு களாக பாடி வருகிறார்கள். அவர்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருமண விழாக்களில் கூட இந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்? என்று கேட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com