ஊழலில் ஈடுபடும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு

ஊழலில் ஈடுபடும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.
ஊழலில் ஈடுபடும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு
Published on

பெங்களூரு:

ஊழலில் ஈடுபடும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.

திட்ட பயன்கள்

கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே முதல் முறையாக தனது துறை அதிகாரிகளுடன், அதாவது அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை போய் சேருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அரசின் திட்ட பயன்கள் தகுதியான மக்களுக்கு போய் சேருவதை உறுதி செய்ய வேண்டும். இதில் ஊழல் செய்யும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம அளவில் அரசு நிர்வாகத்தை சுறுசுறுப்பாக இயங்க செய்ய வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டு

15 நாட்களுக்கு ஒரு முறை இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். நீங்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். தவறுகள் நடைபெறுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வரும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீதான விசாரணையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com