

புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுகாதார சேவையில், இந்தியா எப்போதும் சந்திக்காத மாபெரும் சுமையை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் தொழில், வர்த்தக நிறுவனங்களின் ஆதரவு தேவை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படும் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் உபகரணங்கள் வினியோகத்துக்கு தொழில் நிறுவனங்கள் நிதிஉதவி வழங்கி வருகின்றன. அதுபோல், இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.