மகனின் புகைப்பட கண்காட்சிக்கு இடையூறு; பிரதமர் மோடி மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அதிகாரத்தில் இருப்பவர் கருத்து வெளிப்பாட்டைக் கண்டு அஞ்சும்போது, அதிகாரத்தை இழந்து விடுகிறார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மகனின் புகைப்பட கண்காட்சிக்கு இடையூறு; பிரதமர் மோடி மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Published on: 

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்காவின் மகன் ரைஹான் வதேரா, புகைப்பட கலைஞராவார். இவர் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் நடந்து வரும் போராட்டங்களின் புகைப்படங்களை டெல்லியில் கண்காட்சிக்கு வைத்துள்ளார். இதற்காக பிகானேர் ஹவுஸ் கட்டிடத்தின் 2 அறைகளை எடுத்து அதில் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருந்தார்.

முறைப்படி அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை 2 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் கண்காட்சி ரத்து செய்யப்படும் என கட்டிட நிர்வாகம் நேற்று முன் தினம் கூறியதாகவும், அத்துடன் சில படங்களை அவர்களே அகற்றியதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். பின்னர் மீதமுள்ள புகைப்படங்களுடன் நேற்று கண்காட்சி நடந்தது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பிரியங்கா கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் மற்றொருவரின் கருத்து வெளிப்பாட்டை கண்டு அஞ்சும்போது, தன்னை அறியாமலேயே அந்த அதிகாரத்தை இழந்து விடுகிறார்' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது மகனின் செயல்பாடு குறித்து அவர் பெருமிதமும் வெளியிட்டு இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com