

புதுடெல்லி,
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் ஏராளமாக மிதந்து வந்தன. அந்த உடல்கள் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில், கங்கையில் உடல்கள் மிதந்து வந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வதேரா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அங்கு நடந்தது மனிதத்தன்மையற்ற குற்றச் செயலாகும். மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சீர்குலைந்து தவிக்கும் நிலையில் அரசாங்கம் தனது தோற்றத்தை காப்பாற்றிக் கொள்ளவே முயற்சிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.