பிரியங்கா 14-ந் தேதி கேரளா வருகை

நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பிரியங்கா 14-ந் தேதி கேரளா வருகை
Published on

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி சார்பில் ஆரியாடன் சவுகத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா எம்.பி. வருகிற 14-ந் தேதி நிலம்பூர் வருகிறார். அவர் நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com