

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள கரோல் பாக் மற்றும் ஜந்தேவலான் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சார்ந்து இயங்கும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்களால் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வாசகங்கள் நேற்று இரவு எழுதப்பட்டிருக்கலாம் என ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.