தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது எளிது - மத்திய மந்திரி விளக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது எளிது என்று மக்களவையில் மத்திய மந்திரி விளக்கமளித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது எளிது - மத்திய மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி,

மக்களவை கேள்வி நேரத்தில், ''தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் அசவுகரியங்கள் நிலவுவது அரசுக்கு தெரியுமா?'' என்று கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கூறியதாவது:-

அதிக ஓய்வூதியத்துக்கு இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது மிகவும் எளிதானது. புரிந்துகொள்வது எளிதானது. வருங்கால வைப்புநிதி திட்ட விதிமுறைகளின்படி, குறைவான ஆவணங்களை தாக்கல் செய்தால் போதும்.

சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் வசதிக்காக அவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவுமாறு வைப்புநிதி கள அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com