நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க தடை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது தொடர்பான மேல்முறையீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க தடை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபான கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல்களுக்கான சமூக நீதிப்பேரவை தலைவர் கே.பாலு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அதனை உடனடியாக மூட வேண்டும். அதுபோல வகைமாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது என்று கூறி இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே கே.பாலு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவருடைய வக்கீல் எஸ்.தனஞ்ஜெயன் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com