அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு

அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக 24-ந் தேதி அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்கிறார். அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அவரது வருகை குறித்து முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா வரும் நிலையில், கவுகாத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தனிநபர்களும், குழுக்களும் போராட்டம் நடத்தி அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதால், மறுஉத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என்று போலீஸ் கமிஷனர் திகந்தா பரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com