ராஜஸ்தானில் ரூ.1.06 லட்சம் கோடியில் திட்டங்கள்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
ராஜஸ்தானில் ரூ.1.06 லட்சம் கோடியில் திட்டங்கள்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, ​​ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். 480 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ராஜஸ்தானின் பலோத்ராவில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். இந்தத் திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து, ரெயில்வே உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியுள்ளன. நாட்டின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஒரு மைல்கல் சாதனையாக அமையும் வகையில், பலோத்ராவில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அமையவுள்ள ஜெய்ப்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com