ஹெலிகாப்டர், விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்.
ஹெலிகாப்டர், விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்
Published on

புதுடெல்லி,

வான் வழி பயணத்தின்போது ஏற்படும் விபத்து என்பது எப்போதாவது அரிதாக நடக்கும் சம்பவம் ஆகும். விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ பறக்கும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் விபத்து நடக்கிறது.

இதனால், அதில் பயணித்தவர்களும் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, செல்வந்தர்கள், முக்கிய பிரபலங்களே இதுபோன்ற வான்வழி பயணத்தை அடிக்கடி மேற்கொள்கிறார்கள். மற்றபடி, பணி நிமித்தம் காரணமாக சாதாரண மக்களும் உள்நாட்டு, வெளிநாட்டு பொது விமான போக்குவரத்தை பயன்படுத்துவது உண்டு.

அந்த வகையில், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்.

இதற்கு முன்பு, ஹெலிகாப்டர், விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள் விவரம் வருமாறு:-

1973- காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம்.

1980 - மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி.

1994- பஞ்சாப் கவர்னர் சுரேந்திரநாத்.

1997- தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை மந்திரி என்.வி.என்.சோமு.

2001- மத்திய மந்திரி மாதவராவ் சிந்தியா.

2004- பா.ஜ.க. பிரமுகரும், நடிகையுமான சவுந்தர்யா.

2009- ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

2011- அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி டோர்ஜி காண்டு.

2021- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.

2025- குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ருபானி.

2026- மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com