காமன்வெல்த் 2030 போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்


காமன்வெல்த் 2030 போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

இந்தியா கடைசியாக 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு இன்று கூடியது. அப்போது, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும் என்றும், அங்கு உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், பயிற்சி வசதிகள், விளையாட்டு கலாசார பேரார்வம் உள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. ஒருவேளை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால், குஜராத் அரசுக்கு உதவக்குடிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் கடைசி வாரம் நடைபெற இருக்கும் காமன்வெலத் போட்டிக்கான பொதுக்கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும். பட்ஜெட் விவகாரம் தொடர்பாக கனடா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது. 2036 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா தீவிராக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story