வீட்டில் விபசாரம்; வடமாநில பெண்கள் 2 பேர் கைது

வீட்டில் வடமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
வீட்டில் விபசாரம்; வடமாநில பெண்கள் 2 பேர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் குடியிருப்பு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வடமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டுரங்கா உத்தரவின் பேரில் பங்காருபேட்டை இன்ஸ்பெக்டர் தயானந்த் தலைமையில் போலீசார் மாற்று உடையில் சம்பவ இடத்துக்கு வந்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் வடமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று 2 பெண்களையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அதிக பணம் தருவதாக கூறி  தங்களை அழைத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com