லெனின் சிலை அகற்றம்: கொல்கத்தாவில் நடைபெறும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் போராட்டம் நடத்தப்படுகிறது. #TripuraViolence
லெனின் சிலை அகற்றம்: கொல்கத்தாவில் நடைபெறும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு
Published on: 

கொல்கத்தா,

திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்குவந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

திரிபுராவில் அரசியல் வன்முறை வெடித்து உள்ளது தொடர்பாக சீதாராம் யெச்சூரி பேசுகையில், அரசியல் வன்முறையில் பாரதீய ஜனதா செழித்தோங்குகிறது. இது பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயற்கையான குணமாகும். தாக்குதல்களை கவர்னர் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கரமான செயலாகும், என்றார். திரிபுரா வன்முறை சம்பவங்கள் மற்றும் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் லெனின் சிலையின் முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்தார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com