குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் - மத்திய மந்திரி சொல்கிறார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் - மத்திய மந்திரி சொல்கிறார்
Published on

ஹமிர்பூர்,

இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டமானது மக்களுக்கானது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரசும், இடதுசாரிகளும் இந்த போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சி பீடத்துக்கு வருவதில் தோல்வி அடைந்து ஓட்டுக்காக மக்களை அவர்கள் திசை திருப்புகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நியாயமானது மற்றும் மக்களுக்கானது என்பதை மக்கள் உணர்ந்ததும் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும். இந்த சட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு நன்மை அளிக்கும். சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தவறானது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com